முக அழகிரிக்கு சிறப்பு சலுகை கொடுத்ததா தேர்தல் ஆணையம்

 

முக அழகிரிக்கு சிறப்பு சலுகை கொடுத்ததா தேர்தல் ஆணையம்

கட்சி தொடங்க விரும்பும் ஒரு குழுவினர், அந்த அமைப்பு, கழகத்தை மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1988 இன் படி கட்சி ஆரம்பிக்கப்படும் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்யப்படுதல் வேண்டும். அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பித்த கழகத்தின் தலைமைச் செயல் அலுவலர், செயலாளர், கையொப்பமிட வேண்டும், அந்தக் கையெழுத்தானது தேர்தல் ஆணையத்தின் செயலருக்கு முன் நிகழ வேண்டும் என்பது விதி. மேலும் தொடங்கும் புதிய கட்சியானது இந்தியாவின் ஒருமைப்பாடு, சமூக பொது உடமை, இறையாண்மையைப் பாதுகாக்கும் என உறுதி அளிக்க வேண்டும்.

முக அழகிரிக்கு சிறப்பு சலுகை கொடுத்ததா தேர்தல் ஆணையம்

புதிதாக கட்சிகள் தொடங்க 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் அதனை 7 நாளாக குறைத்தது இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் இந்த புதிய நடைமுறை 26-02-2021க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் தி.மு.க வை பதிவு செய்ய மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் இந்த சலுகையை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.