தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும், வேட்பு மனுத்தாக்கல் மார் 12 ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, மனுதாக்கலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்வது, பிரசார வியூகங்களை வகுப்பது உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதனிடையே தேர்தல் அறிவிப்பு, வெளியான இரண்டு மணி நேரத்திற்குப் பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் என அறிவிக்கப்பட்டது. இவ்விதியின்படி பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் என எதையும் வாக்காளார்களுக்குக் கொடுக்கக் கூடாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

இந்த சூழலில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கப்படும். எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் இன்றுடன் முடிவடைகிறது. எம்.எல்.ஏ.க்களின் சொந்த பொருட்கள் மற்றும் கோப்புகள் இருந்தால் அவற்றை காலி செய்து அறையை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.