தேர்தல் பிரச்சாரம்: 20ம் தேதி மு.க ஸ்டாலின் ஆலோசனை!

 

தேர்தல் பிரச்சாரம்: 20ம் தேதி மு.க ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டே வருகிறது. தேசியக் காட்சிகளாகவே இருப்பினும் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடிய சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகள் தனிப்பெரும் பெருமையை பெற்றிருக்கின்றன. தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரம்: 20ம் தேதி மு.க ஸ்டாலின் ஆலோசனை!

அதிமுக ஒரு பக்கம் தீவிரமாக களப்பணியில் இறங்கியிருக்கும் நிலையில், கடந்த 2 முறையாக கைவிட்ட ஆட்சியை இந்த முறை பிடித்தே ஆக வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதனால் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே, திமுக தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டது. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல முறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வரும் 20ம் தேதி ஆலோசனை நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்களுடன் 20 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் ஆலோசனை நடக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.