“கோவையில் தேர்தல் பரப்புரை” – கோனியம்மன் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்!

 

“கோவையில் தேர்தல் பரப்புரை” – கோனியம்மன் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்!

தேர்தல் பரப்புரைக்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் சாமி தரிசனம் செய்தார்.

“கோவையில் தேர்தல் பரப்புரை” – கோனியம்மன் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகளை தமிழக கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரையில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விரைவில் தேர்தல் பரப்புரையை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“கோவையில் தேர்தல் பரப்புரை” – கோனியம்மன் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்!

அதிமுகவைப் பொறுத்தவரையில் நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி களத்தில் இறங்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவில் திட்டங்கள், மக்களுக்கு செய்துள்ள சேவைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு அவர் பேசி வருகிறார்.

“கோவையில் தேர்தல் பரப்புரை” – கோனியம்மன் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்!

இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனால் முன்னதாக அவர் கோனியம்மனை தரிசித்தார்.