தேர்தல் பரபரப்பும், ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையும்?

 

தேர்தல் பரபரப்பும், ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையும்?

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகியுள்ள 7 குற்றவாளிகளும் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டு, வருகிற தேர்தலில் அதிமுகவிற்கு அது சாதகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித குண்டுவெடிப்பால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி மற்றும் அவரது கணவர் உட்பட 7 பேர் சிறப்பு தடா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.இந்தக் கொலை வழக்கில் ஏழு குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான சாத்தியங்கள் குறித்து கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் பரபரப்பும், ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையும்?


மேற்படி ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான பரிந்துரையை கடந்த நவம்பர் 3 ம் தேதி, தமிழக அரசு, ஆளுநருக்கு அனுப்பியது.இதன் பின்னர் தமிழக ஆளுநர் புரோஹித், பிரதமர், உள்துறை அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் மற்றும் இந்திய துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்திக்க டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இது பற்றி கோவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ஆளுநருக்கு இந்த விடுதலை தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்தை தங்கள் அரசாங்கம் ஏற்கனவே அனுப்பியுள்ளதாகவும், அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தேர்தல் பரபரப்பும், ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையும்?


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை ஆராய்ந்து வரும் பன்முக ஒழுங்கு கண்காணிப்பு முகமையின் விசாரணை காரணமாகவே ஆளுநரின் முடிவில் இருந்த தாமதத்திற்கு காரணம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விடுதலை விவகாரம் நிலுவையில் இருப்பதால் உச்சநீதிமன்ற பெஞ்ச் இது குறித்து அதிருப்தி

தேர்தல் பரபரப்பும், ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையும்?

தெரிவித்தது. மேலும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஆளுநரின் முடிவில் பன்முக ஒழுங்கு கண்காணிப்பு முகமையின் விசாரணை விசாரணை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து ராஜீவ் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தெரிய வந்துள்ளது. இது குறித்து சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும் போது ஏழு குற்றவாளிகளும் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்,

தேர்தல் பரபரப்பும், ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையும்?

ஆளுநர் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்,” என்றும் கூறியுள்ளார்..தமிழக அரசியல் பார்வையாளர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். ராஜீவ் கொலை வழக்கில் கைதாகியுள்ள 7 குற்றவாளிகளும் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டு, வருகிற தேர்தலில் அதிமுகவிற்கு அது சாதகமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.