திட்டமிட்டப்படி 234 தொகுதிகளிலும் தேர்தல்- தேர்தல் ஆணையம்

 

திட்டமிட்டப்படி 234 தொகுதிகளிலும் தேர்தல்- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கு நேற்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் பணப் பட்டுவாடா வேலைகளில் பரபரப்பாக இயங்கின. தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே பல புகார்கள் போய்க் கொண்டிருக்கின்றன. பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுவரும் அதிமுக, திமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பறக்கும் படையினர் கொக்கிப்போட்டு தூக்கிவருகின்றனர்.

திட்டமிட்டப்படி 234 தொகுதிகளிலும் தேர்தல்- தேர்தல் ஆணையம்

இந்நிலையில் சென்னை தலைமை செயலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரத சாகு, “தமிழகத்தில் திட்டமிட்டப்படி 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறும். பணப்பட்டுவாடா புகார்களால் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து என சமூக வலைதளங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை. தற்போதுவரை தேர்தல் ரத்து தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன” எனக் கூறினார்.