இந்த தினங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது!

 

இந்த தினங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதே போல, தமிழக தேர்தல் ஆணையமும் பதற்றமாக இருக்கும் வாக்குச்சாவடிகளை கண்டறிவதிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதிலும் முழு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த தினங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது!

இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்றே அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் பறக்கும் படையினர், மக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் வெள்ளிப் பொருட்கள், ஸ்கூல் பேக்குகள், குக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த தினங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது!

இந்த நிலையில் சனி, ஞாயிற்று கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அளிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.