அமமுகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

 

அமமுகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

கடந்த சில ஆண்டுகளாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வேறு கட்சிகளில் உள்ள திரை உலகினர் கூட அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இன்று கூட நடிகர் செந்தில் அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

அமமுகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் கர்நாடக இசை பாடகரும், பிரபல திரைப்பட நடிகருமான மோகன் வைத்தியா தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். இதேபோல் சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரன் அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் முன்னிலையில் தன்னை அமமுகவில் இணைத்துக்கொண்டார்.