“செந்தில் பாலாஜியிடம் சுருண்ட விஜயபாஸ்கர்” முக்கிய அமைச்சர்கள் 11 தோல்வி…!

“செந்தில் பாலாஜியிடம் சுருண்ட விஜயபாஸ்கர்” முக்கிய அமைச்சர்கள் 11 தோல்வி…!

கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தோல்வியடைந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை வீழ்த்தி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். திமுக 159 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் , அதிமுக 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக அமைச்சர்கள் 11 பேர் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர். அத்துடன் 16 பேர் வெற்றி அடைந்துள்ளனர்.

“செந்தில் பாலாஜியிடம் சுருண்ட விஜயபாஸ்கர்” முக்கிய அமைச்சர்கள் 11 தோல்வி…!

அதிமுக அமைச்சர்கள் சிவி சண்முகம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி , ஜெயகுமார் , எம்.சி.சம்பத், நடராஜன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், பாண்டியராஜன் , ராஜலட்சுமி, சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

“செந்தில் பாலாஜியிடம் சுருண்ட விஜயபாஸ்கர்” முக்கிய அமைச்சர்கள் 11 தோல்வி…!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லுார் ராஜு, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, அன்பழகன், கருப்பணன், காமராஜ், ஓ.எஸ்.மணியன் , உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் , கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகிய 16 பேர் வெற்றி பெற்றுள்ளார்.