6+3+2+1=12 :சட்டமன்றத்திற்கு செல்லும் பெண் எம்.எல்.ஏக்கள்

 

6+3+2+1=12 :சட்டமன்றத்திற்கு செல்லும் பெண் எம்.எல்.ஏக்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்றவர்கள் 234 பேரில் 12 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 6 பேர் திமுக எம்.எல்.ஏக்கள். 3 பேர் அதிமுக எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.எல்.ஏக்கள் 2 பேர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் மட்டுமே.

6+3+2+1=12 :சட்டமன்றத்திற்கு செல்லும் பெண் எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டமன்ற வரலாற்றி்லேயே 1991ல் நடந்த தேர்தலில்தான் அதிகபட்சமாக 32 பெண்கள் சட்டமன்றத்திற்கு தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக சார்பில் அமுலு -குடியாத்தம், கயல்விழி -தாராபுரம், சிவகாமசுந்தரி -கிருஷ்ணராயபுரம்(தனி), தமிழரசி – மானாமதுரை, கீதா ஜீவன் -தூத்துக்குடி, வரலட்சுமி மதுசூதனன் -செங்கல்பட்டு ஆகிய 6 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு செல்கிறார்கள்.

அதே போல, அதிமுக சார்பில் தேன்மொழி – நிலக்கோட்டை(தனி), மரகதம் குமாரவேல் – மதுராந்தகம், சித்ரா -ஏற்காடு ஆகிய மூன்று பெண் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் செல்கிறார்கள்.

பாஜக சார்பில் வானதி சீனிவாசன் -கோவை தெற்கு, சரஸ்வதி – மொடக்குறிச்சி ஆகிய 2 பெண் எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி – விளவங்கோடு ஒரு பெண் எம்.எல்.ஏவும் சட்டமன்றத்திற்கு செல்கின்றனர்.