39,588 வாக்குகள் வித்தியாசத்தில் சீமான் தோல்வி

 

39,588 வாக்குகள் வித்தியாசத்தில் சீமான் தோல்வி

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு 39 ஆயிரத்து 588 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

துறவி பட்டினத்தார் முக்தி அடைந்த ஜீவசமாதி அமைந்திருக்கும் இடம் திருவொற்றியூர். வள்ளலார் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இடமும் திருவெற்றியூர். இராமலிங்க அடிகளார் உட்பட பலரும் போற்றி வணங்கிய ஒற்றீசுவரர் எனப்படும் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் இத்தொகுதியில் அமைந்திருக்கின்றன.

39,588 வாக்குகள் வித்தியாசத்தில் சீமான் தோல்வி

கடலோர கிராமங்கள் நிறைந்திருக்கும் பகுதி திருவெற்றியூர். இத்தொகுதியில் இது வரைக்கும் நடந்திருக்கும் 12 தேர்தல்களில் திமுக 6 முறையும் அதிமுக 4 முறையும் காங்கிரஸ் ஒரு முறையும், காந்தி காமராஜ் ,தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 1989 தேர்தலில் இருந்து திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் கே. பி. பி சாமி 82205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 17 ஆயிரத்து 342 வாக்குகள் பெற்ற பி.பால்ராஜ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 13463 வாக்குகள் பெற்ற ஏவி. ஆறுமுகம் மூன்றாவது இடத்தில் சென்றார் .

2021 சட்டமன்ற தேர்தல் திமுக சார்பில் கேபி. சங்கர், அதிமுக சார்பில் கெ.குப்பன், அமமுக சார்பில் சௌந்தரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக எஸ்டி.மோகன், நாம் தமிழர் சீமான் ஆகியோரும் களமிறங்கினர்.

நாம்தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியதால் திருவொற்றியூர் பகுதியில் நட்சத்திர அந்தஸ்து தொடங்கியது. இன்று நடந்த வாக்கு எண்ணிக்கை நிலவரம் சீமான் 39 ஆயிரத்து 588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.