33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்பு தோல்வி

 

33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்பு தோல்வி

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு 33 ஆயிரத்து 44 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்பு தோல்வி

திமுகவும் அதிமுகவும் இதுவரைக்கும் நேர் எதிராக களம் காணுவதை கண்டு வந்த ஆயிரம் விளக்கு, முதல் முறையாக அதிமுக கூட்டணியின் சார்பில் பாஜக வேடபாளர் களமிறங்கி இருப்பதை காண்கிறது. எளியவர்கள் முதல் பணக்காரர்கள் வரை வாழும் இத்தொகுதி அரசியல் மற்றும் சினிமா விஐபிக்கள் அதிகம் வாழும் ஒரு தொகுதி. முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி , நடிகர் பிரபு, நடிகர் ராதாரவி, உள்ளிட்ட விஐபிக்கள் வசிக்கும் தொகுதி ஆயிரம் விளக்கு. எம்.என்.நம்பியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த தொகுதியும் இதுதான்.

33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்பு தோல்வி

சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் 1977ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள 10 தேர்தல்களில் லீடிங்கில் திமுக தான் இருக்கிறது. தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினின் ஆஸ்தான தொகுதி ஆயிரம் விளக்கு தான். ஆறு முறை போட்டியிட்ட அவருக்கு நான்கு முறை வெற்றியைக் கொடுத்த தொகுதி. சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 1984ஆம் ஆண்டு தேர்தல் தான் ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட்ட முதல் தேர்தல். அப்போது அவர் அதிமுகவின் கே.ஏ. கிருஷ்ணசாமியிடம் தோல்வியுற்றார். 1991ஆம் ஆண்டும் அவரிடமே தோற்றார். 1989,1996,2001,2006 ஆகிய தேர்தல்களில் ஸ்டாலின் வெற்றிபெற்றார். 2011ஆம் ஆண்டு அதிமுகவின் வளர்மதியும், 2016ஆம் ஆண்டு திமுகவில் இருந்த கு.க.செல்வமும் வெற்றிபெற்றனர். கு.க.செல்வம் தற்போது பாஜகவில் உள்ளார்.

2021 தேர்தலில் திமுக வேட்பாளராக மருத்துவர் எழிலன், பாஜக வேட்பாளராக குஷ்பு சுந்தர், அமமுக வேட்பாளர் வைத்தியநாதன், நாம் தமிழர் ஷெரீன் ஆகியோர் களமிறங்கினர்.

வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்றின் முடிவில், திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 71537 வாக்குகளும், பாஜக வேட்பாளர் குஷ்பு 38493 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் விட, 33044 வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்பு தோல்வி அடைந்திருக்கிறார்.