எச்.ராஜா படுதோல்வி: காங். வீழ்த்தியது

 

எச்.ராஜா படுதோல்வி: காங். வீழ்த்தியது

பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா காரைக்குடி தொகுதியின் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார்.

எச்.ராஜா படுதோல்வி: காங். வீழ்த்தியது

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு 19 ஆயிரத்து 888 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்தார் எச்.ராஜா. நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக காரைக்குடி தொகுதியில் களம் இறங்கிய எச்.ராஜா, 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தார்.

காரைக்குடி சட்டமன்ற தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்று அவர் உறுதியாக சொல்லி வந்தார்.

எச்.ராஜா படுதோல்வி: காங். வீழ்த்தியது

அதிமுக – பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் அழுத்தமாக சொல்லி வந்தார் எச்.ராஜா. தேர்தல் ஆணையம் மீது திமுக குற்றம் சுமத்தியப்போதெல்லாம், வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது திமுகவினர் சந்தேகம் கொண்ட போதெல்லாம், தோல்வி பயத்தில் திமுகவினர் பிதற்றுகிறார்கள் என்று சொல்லி பாஜகவினருக்கு உற்சாகம் கொடுத்து வந்தவர் எச்.ராஜா. ஆனால், இன்றைக்கு அவரது தோல்வி கண்டு துவண்டு போயிருக்கிறார்கள் பாஜகவினர்.

தமிழக அரசால் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட நகரம் காரைக்குடி. இத்தொகுதியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றன. முத்தரையர், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், யாதவர், நகரத்தார், பிள்ளைமார், உடையார், வல்லம்பர் ,சிறுபான்மையினர் என பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

57 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 4 முறையும், திமுக காங்கிரஸ் தலா மூன்று முறையும், சுதந்திரா கட்சி இரண்டு முறையும், பாமக பாஜக, தலா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.

எச்.ராஜா படுதோல்வி: காங். வீழ்த்தியது

கடந்த 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கே .ஆர். ராமசாமி போட்டியிட்டு 93 ஆயிரத்து 419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் .75 ஆயிரத்து 136 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக எச். ராஜா இத்தொகுதியில் களமிறங்கினார். காங்கிரஸ் சார்பில் எஸ். மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் பி. ராஜகுமார் , நாம் தமிழர் கட்சி சார்பில் என் துரைமாணிக்கம் ஆகியோர் களமிறங்கினர். இதில் எச். ராஜாவுக்கும், எஸ் மாங்குடிக்கும் போட்டி நிலவியது. நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் படி எச். ராஜா, எஸ். மாங்குடி இடம் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார்.