கடுமையாக போராடி 8வது முறையாக காட்பாடியை கைப்பற்றிய துரைமுருகன்

 

கடுமையாக போராடி 8வது முறையாக காட்பாடியை கைப்பற்றிய துரைமுருகன்

கடைசி வரைக்கும் கடுமையாக போராடி 8வது முறையாக காட்பாடியை கைப்பற்றினார் துரைமுருகன்.

கடுமையாக போராடி 8வது முறையாக காட்பாடியை கைப்பற்றிய துரைமுருகன்

தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள தொகுதி வேலூர் மாவட்டத்தின் காட்பாடி தொகுதி. விவசாயமும், வணிகமும் முக்கிய தொழிலாக இருக்கும் இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அடுத்தபடியாக தலித், முதலியார், நாயுடு சமூகத்தினர் உள்ளனர். 1962 முதல் தேர்தலை சந்தித்து வரும் இத்தொகுதியில் திமுக 8 முறையும், அதிமுக மூன்று முறையும், இ.கம்யூ., காங்., தலா ஒருமுறையும் வென்றுள்ளன.

காட்பாடி தொகுதியை பொறுத்தவரையில் 1991 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த கலைச்செல்வி வெற்றிபெற்றுள்ளார். ஆனால் அதன்பிறகு நடந்த 1996 ,2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் துரைமுருகன் வெற்றிக்கனியை மட்டுமே சுவைத்து வந்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் 10 வது முறையாக காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார்.

கடுமையாக போராடி 8வது முறையாக காட்பாடியை கைப்பற்றிய துரைமுருகன்

71, 89, 96, 2001, 2006, 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்ற துரைமுருகன், 84 மற்றும் 91 தேர்தலில் அதிமுகவிடம் தோற்றார்.

தற்போது காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் , அதிமுக சார்பில் வி. ராமு, அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா, ஐஜேகே வேட்பாளராக எம்.சுதர்சன், நா.த.க வேட்பாளர் ச. திருக்குமரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஏப்ரல் 6ம் அன்று நடந்த வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பின்னடைவில் இருந்து வந்த துரைமுருகன், இறுதிக்கட்டத்தில் கடும் போராட்டத்திற்கு பின்னர் 758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காட்பாடி தொகுதியில் 8 முறையாக வெற்றியை பெற்றிருக்கிறார்.