• November
    15
    Friday

Main Area

Main



எதிரிகளையும் நேசிக்கும் குணம் இதுதானோ! மோடியின் பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்பு!!

sonia
sonia

பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353  தொகுதிகளில் வெற்றிப்பெற்று மோடி தலைமையிலான பாரதிய ஜனதா மீண்டும் மத்தியில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

டெல்லியில் நாளை மோடி பிரதமராக பதவியேற்க உள்ள, நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.