இனி ரேஷன் கடைக்கு மாற்றுத்திறனாளி, முதியோர் செல்ல அவசியமில்லை!

 

இனி ரேஷன் கடைக்கு மாற்றுத்திறனாளி, முதியோர் செல்ல அவசியமில்லை!

ரேஷன் கடைகளுக்கு செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் தமிழக அரசு விலக்கு அளித்திருக்கிறது.

தமிழக மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக, நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். அதன் படி, மக்களின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ரேஷன் கடைகளுக்கு செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் விலக்கு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி ரேஷன் கடைக்கு மாற்றுத்திறனாளி, முதியோர் செல்ல அவசியமில்லை!

அதாவது, சரிபார்ப்பு இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் தரப்படும் என்ற முறையில் இருந்து விலக்கு அளிப்பதாக உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் ஆணையர் சஜ்ஜன்சிங் ஆட்சியர்கள் மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

இனி ரேஷன் கடைக்கு மாற்றுத்திறனாளி, முதியோர் செல்ல அவசியமில்லை!

அந்த அறிக்கையில், ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள் வாங்க முடியாதோர் அங்கீகார சான்றை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் அங்கீகார சான்றில் குறிப்பிடப்படும் நபர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கோரிக்கை பெறப்பட்ட அன்றே அங்கீகார சான்றை கடைப்பணியாளர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, ரேஷன் கடைகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பதிலாக வேறு ஒரு நபர் பொருட்களை பெற்றுச் செல்ல முடியும்.