சிறப்பு ரயில்களில் முதியோர் கட்டண சலுகை ரத்து – கனிமொழி எதிர்ப்பு!

 

சிறப்பு ரயில்களில் முதியோர்  கட்டண சலுகை ரத்து – கனிமொழி எதிர்ப்பு!

சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்று திறனாளிகளுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில்களில் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களில் முதியோர்  கட்டண சலுகை ரத்து – கனிமொழி எதிர்ப்பு!

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடும் அனைத்து விரைவு ரயில்களிலும் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் 50-75 விழுக்காடு வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சலுகைகள் எதுவும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடையாது என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது.

பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.