பென்ஷன் பணம் வாங்க 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்து சென்ற 70 வயது மகள்

 

பென்ஷன் பணம் வாங்க 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்து சென்ற 70 வயது மகள்

நவுபடா: 70 வயது மகள் தனது 120 வயதான தாயின் பென்ஷன் பணத்தை வாங்க கட்டிலுடன் அவரை வங்கிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நுபாடா மாவட்டத்தின் காரியர் தொகுதிக்கு உட்பட்ட பராகன் கிராமத்தை சேர்ந்த முதிய பெண்மணி குஞ்சா டே. இவருக்கு வயது 70 ஆகும். ஆனால் இவரது தாயார் லாபே பாகேல் இன்னும் உயிருடன் உள்ளார். அவருக்கு 120 வயது ஆகிறது. தனது ஓய்வூதிய பணம் ரூ.1500-ஐ பெறுவதற்கு வங்கிக்கு தனது மகளை லாபே பாகேல் அனுப்பினார். ஆனால் லாபே பாகேல் இன்னும் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது வங்கி ஊழியருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் ஓய்வூதிய பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். எனவே லாபே பாகேலை நேரில் கூட்டி வருமாறு வங்கி ஊழியர் கூறியுள்ளார்.

பென்ஷன் பணம் வாங்க 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்து சென்ற 70 வயது மகள்

எனவே படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயை வங்கி அலுவலகம் வரை கட்டிலுடனே குஞ்சா டே இழுத்து சென்றார். வங்கியை அடைந்தவுடன் தாய் மற்றும் மகளின் நிலைமையை உணர்ந்த வங்கி அதிகாரி ஓய்வூதிய பணத்தை வழங்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அத்துடன் இரண்டு வயதான பெண்களை வங்கிக்கு அலைக்கழித்த வங்கி அதிகாரிகளை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.