Elbow Guard டிசைனை மாற்றுங்கள் ! சச்சினுக்கே அட்வைஸ் செய்த ஊழியருக்கு வலை !

சென்னையில் ஓட்டல் ஊழியர் ஒருவர் சொன்ன ஐடியாவால் சாதனைகள் பல படைத்ததாக சச்சின் டெண்டுல்கர் தற்போது தெரிவித்துள்ளார். தற்போது அவரை சந்திக்க விரும்புவதாகவும் டிவிட்டர் பதிவிட்டுள்ளார் சச்சின்.

இது தொடர்பாக டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கள் சென்னை டெஸ்ட் தொடரின்போது நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். 

சென்னையில் ஓட்டல் ஊழியர் ஒருவர் சொன்ன ஐடியாவால் சாதனைகள் பல படைத்ததாக சச்சின் டெண்டுல்கர் தற்போது தெரிவித்துள்ளார். தற்போது அவரை சந்திக்க விரும்புவதாகவும் டிவிட்டர் பதிவிட்டுள்ளார் சச்சின்.

sachin

இது தொடர்பாக டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கள் சென்னை டெஸ்ட் தொடரின்போது நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். 

அதில் சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்கு வந்த ஊழியர் ஒருவர் காபியை என் ரூமுக்கு கொண்டுவந்தார். அப்போது அவர் என்னிடம் “சார் நான் உங்களின் ரசிகன் நீங்கள் எப்போதும் பேட்டிங் பிடிக்கும்போது கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை  மாற்றி அமைத்தால் விளையாடுவதற்கு எளிதாக இருக்கும்” என்று கூறினார். அந்த விஷயத்தை அதுநாள் வரை யாருமே எனக்கு சொல்லவில்லை.

அவர் ஆலோசனையின்படி எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். அதற்கு பிறகு சாதனைகள் பல படைப்பதற்கு அந்த ஐடியா உறுதுணையாக இருந்தது. எனவே தற்போது அந்த ஊழியரை சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க ரசிகர்களாகிய நீங்களும் எனக்கு உதவ வேண்டும்” என கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மொழியிலும் டுவிட் செய்துள்ளார்.
சென்னையில் நாளை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்த பதிவு ரசிகர்களின் கவனம் மேலும் ஈர்த்துள்ளது.

Most Popular

“அவ கிட்ட போயிட்டு என்கிட்டே வராதே” -நாகேஷுக்கு ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவி திட்டினார் -அதுக்கு நாகேஷ் பண்ண கிரைம் வேலைய பாருங்க ..

கர்நாடகாவில் உள்ள பெங்களூருவின் மராத்தஹள்ளி மாவட்டத்தில் நாகேஷ் என்ற மேஸ்திரி தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகலோடு வசித்து வந்தார் ,இந்நிலையில் நாகேஷுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு விதவை பெண்ணுடன் கள்ள...

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?”- தங்கையை காதலித்த வாலிபரை வீடு புகுந்து கொலை செய்த அண்ணன்

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?" என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வாலிபர். இந்த சோக சம்பவம் தேவகோட்டையில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென...

மதுரை உலைப்பட்டியில் தொல்லியல் ஆய்வு வேண்டும்! – சீமான் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளதால் அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...