• April
    05
    Sunday

Main Area

Main



ஏழைகள் மீது வாழைப்பழத்தை வீசிய ஏக்தா கபூர் -'கையை தொட்டால் கொரானா வருமா ?'கொதிக்கும் நெட்டிசன்கள்.. 

ஏக்தா கபூர்
ஏக்தா கபூர்

தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏக்தா கபூர் அதிகமாக கடவுள் பக்தியுள்ளவர் . இந்த டிவி ராணி ஏக்தா அடிக்கடி  குடும்பத்துடன் வெவ்வேறு கோயில்களுக்கு வருவதைக் காணலாம். சமீபத்தில் ஏக்தா ஒரு வெள்ளை சட்டை மற்றும் ஜாகிங் உடையில் சனி பகவான் கோவிலுக்கு வந்தார் .அப்போது நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது .
ஏக்தா கோவிலிலிருந்து வெளியே வந்தவுடன், ஏழைகள்  ஏக்தாவைக் சூழ்ந்து கொண்டனர்  .​​
அப்போது , ஏக்தா கபூர் கோயிலுக்கு வெளியே வாழைப்பழங்களை ஏழைகளுக்கு விநியோகித்தார்.

karuna-kapoor.jpg1


அப்போது ஏக்தா ஏழைகளுக்கு அன்புடன் வாழைப்பழங்களை கொடுப்பதற்கு பதிலாக வாழைப்பழங்களை வீசியெறிந்தார் . ஏக்தா கபூரின் இந்த செயலுக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை ட்ரோல் செய்கிறார்கள்.

 


ஏழைகளுக்கு வாழைப்பழங்களை விநியோகிக்கும் ஏக்தாவின் வழி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அந்த   வீடியோ சமூக தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.மேலும் நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர் ."ஏழைகளின் கையை தொட்டால் கொரானா வருமா ?"என்று ஒருவர் கேக்க ,இன்னொருவர் ,"விருப்பமில்லாமல் எதற்காக கொடுக்க வேண்டும் ?"என்று கேள்வி கேட்டு வருகின்றனர் .

 

2018 TopTamilNews. All rights reserved.