Home சினிமா ’ஷனமைப் பாராட்டி பத்து விஷயங்களா... ரொம்ப கஷ்டமாச்சே!’ பிக்பாஸ் 18-ம் நாள்

’ஷனமைப் பாராட்டி பத்து விஷயங்களா… ரொம்ப கஷ்டமாச்சே!’ பிக்பாஸ் 18-ம் நாள்

சின்ன சண்டை இழுத்துக்கொண்டே போவதும், பெரிய போர் நடந்த அடுத்த நாளில் ‘ஆமா அது எங்க நடந்துச்சு’என்பதுபோல தலைகீழாகா மாறியிருப்பதுதாம் பிக்பாஸ் வீட்டின் அடிப்படை விதிபோல. 17-ம் நாள் சுரேஷ் –ஷனம் சண்டையும் அழுகையும் திட்டலும் இன்னும் ஓரிரு இந்த வானிலை நீடிக்கும் என நினைத்தால் எல்லோரும் கேஷூவலாக மாறியிருந்த நாள் 18-ம் நாள்.

பிக் பாஸ் வீட்டின் 18-ம் நாள்

‘எங்க தல… எங்க தல டி.ஆரு… செண்டிமெண்ட்டுல தாருமாறு’ என்ற எப்படி வேணாலும் இதுக்கு ஆடலாம் என்றுள்ள பாடலை ஒலிக்க விட்டார் பிக்கி. சென்ற சீசனில் சாண்டி, கவின், லாஸ்லியா, தர்ஷன் என ஒரு குரூப் இருந்ததுபோல, இப்போது இருந்திருந்தால் இந்தப் பாட்டுக்கு செமையா ஆடியிருப்பாங்க. ப்ச்… சிம்ப்ளி வேஸ்ட்.

கிச்சன் கேபினெட் சண்டைக்கு இரண்டு நாள் விட்டிருந்த லீவ் முடிஞ்சிருச்சு போல. பாலா பேசியதற்கு முகத்தைத் தூக்கி வெச்சுட்டிருந்தார் சுரேஷ். பிக்பாஸின் வாத்தியாரம்மா அர்ச்சனாவின் சமாதான நடவடிக்கைகள் பலிக்க வில்லை. ஆனாலும் பெரிதாகவும் வளர வில்லை. சரி… இங்கே எதுவும் கண்டண்ட் கிடைக்காது போலிருக்கு என வண்டியை வேற பக்கம் திருப்பினார் பிக்கி.

புது டாஸ்க்கை அறிவித்தார் பிக்கி. பட்டிமன்றமாம். பிக்பாஸ் வீடு ஆனந்த வீடா… போரட்டக்களமா? இதுதான் தலைப்பு.  வழக்கம்போல வாத்தியரம்மா அர்ச்சனாதான் நடுவர். போராட்டக் களத்துக்கு ஆள்கள் அதிகமாக அதில் சிலரை இந்தப் பக்கம் இழுப்பதற்கே பெரும் போராட்டமானது?

பட்டிமன்றத்துக்கான டிரெஸ்ஸோடு வாங்கன்னு அர்ச்சனா சொன்னார். பட்டிமன்றத்துக்கு என டிரெஸ் கோட் இருக்கா மேடம்?

இந்த டாஸ்க் இருவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல என்று நினைத்தோம். ஒருவர் நிஷா. மற்றொருவர் அனிதா. இருவரில் ஒருவர் அசத்த மற்றொருவர் கோட்டை விட்டார்.

ஆனந்த வீடு என்ற தலைப்புக்கு முதல் ஆளே டம்மியாக சோம்ஸை இறக்கினார்கள். உலக வரலாற்றிலேயே முதல்முறையாக ஹிப் ஆப் தமிழா’ ஆதியின் மேற்கோளைச் சொல்லி பேச்சை ஆரம்பித்தார். அப்பவே தெரிஞ்சிடுச்சு, பேச்சு எப்படி இருக்கும்னு ஓரிரு நிமிடங்கள் கழித்து வணக்கம்’ சொல்ல ஆனந்தமானது குடும்பம்.

’நேத்து வயசுல முத்தவர் ஒருத்தர் ஏதோ தெரியாம அடிச்சதுக்கு என்னெல்லாம் சொல்லி திட்டினீங்க’ என பிக்பாஸின் வீட்டுச் சண்டையோட ஆரம்பித்தா போராட்டகளமே டீம் பாலா. ‘அப்படி என் கட்சி காரன் என்ன செஞ்சிட்டான்’ என்ற தொனியில் ஷனம் பேச்சை சாடையில் குத்திக்காட்ட, எப்படி இருக்கும் ஷனம் முகம் என நினைக்க, கரெக்டா காட்டினார் பிக்கி. அதெல்லாம் கரெக்டா எடிட் பண்ணிடுவார். 

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு சொல்றீங்க… கேமரா இல்லாட்டி அந்த எவிக்‌ஷன் ஃப்ரி பாஸைப் போட்டிப்போட்டுடு எடுத்துக்குவீங்க இல்லையா? எல்லோரும் உறவுன்னா… எவிக்‌ஷன்ல நானே போறேன்னு சொல்ல வேண்டியதுதானே? அதை விடுங்க… எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடக்கூட மாட்டேன்கிறீங்க… அதுக்கு கேப்டன் கெஞ்ச வேண்டியதாக இருக்கு” பாயிண்ட் பாயிண்ட்டாக அடுக்கினார் பாலா. பேசுவதில் தடுமாற்றம் இருந்தாலும், சொல்ல வேண்டியதை அழுத்தமாகச் சொன்னார். வெரி குட்.

‘ரம்யா பாஸை விட்டுக்கொடுத்தது அன்பாலதானே… போட்டின்னு நினைச்சிருந்தா கேபியை ஏன் சுரேஷ் தூக்கிட்டு நிக்கப்போறாரு… எல்லாமே போட்டிதான்னா ரேகா வீட்டு விட்டுபோனப்பா அப்ப ஏன் அழுதீங்க?’ என ஷார்ட்டா ஷார்ப்பா முடிச்சார் சம்யுக்தா.

“நானொரு உண்மையைச் சொல்லிக்கிறேன். எவிக்‌ஷன் ப்ரி பாஸை விட்டுக்கொடுக்கல’ என்று ஆரம்பித்த ரம்யா, ‘நீங்க சொல்ற மாதிரி விட்டுக்கொடுக்கல… நான் வேற மாதிரி விட்டுக்கொடுத்தேன்’என்பதாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘எந்தப் போட்டியாக இருந்தாலும் என் எத்திக்ஸோடுதான் விளையாடுவேன்’ என்றார். ஆமா, சிலையா நிக்கிறவங்க மேல ஸ்ப்ரே அடிக்கலாம்னு சொன்னீங்களே… அதுதான் உங்க எத்திக்ஸா மேடம்? என்னம்மா இது இப்படி பண்றீங்களே?

”நம்ம வீட்டுப் பிரச்னையை விடவா… பிக்பாஸ் வீட்டுல பிரச்னை இருந்துட போகுது’னு அனுப்பி வைச்சாங்க” என்று சொந்தக் கதையோடு ஆரம்பித்தார் ரியோ. இவரும் வண்டியை எவிக்‌ஷன் ஃப்ரி பாஸ் பக்கமே இழுத்தார். ‘எவிக்‌ஷன் ஃப்ரி பாஸ்ங்கிறது அம்மாவின் சக்கரை டப்பாக்குள்ள இருக்குற ரெண்டு ரூபா மாதிரி… தேவைப்பட்டா எடுத்துப்பேன். இல்லாட்டி, அம்மா நல்லதா ஏதாச்சும் வாங்கிப்பாங்க” என்றதும், ‘எல்லோர் கண்ணும் என் பாஸ் மேலேயே இருக்கு’ என்று ஆஜித் வயிற்றில் எரிந்துகொண்டிருந்த தீயில் நெய் ஊற்றினார் அடுத்து பேச வந்த ரமேஷ்.

”ஆஜித்தை அப்படிப் பார்த்துக்கிறார் பாலா… நாளைக்கே அவர் எவிக்ட் ஆனா, ஆஜித் நிச்சயம் அந்த பாஸைக் கொடுப்பான்” என சத்தியம் செய்ய, “உங்களை வெச்சி சத்தியம் பண்ணுங்கைய்யா… என்னையே ஏன்யா நோண்டறீங்க?” என பரிதாபாகப் பார்த்தார் ஆஜித்.

எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்த சுரேஷ் ஜி வந்து, “நாமினேஷன் செய்கையில் ஒரு குருப்பாகத்தான் இருக்கிங்க… ஆங்காங்கே ஆனந்தம் இருக்கு. ஒட்டுமொத்தமா ஆனந்தம் இல்ல’என்ற உண்மையைப் பட்டுபடாத வாறு நல்லாவே சொன்னார். ஆனால், சென்ற சீசன்களை விடவும் குருப்பிஸம் தலை தூக்காத சீசன் இதுதான். சென்ற முறை எல்லாம், சாண்டி குரூப் செய்தது ஜாலியாக இருந்தாலும் மதுமிதாவை டார்கெட் பண்ணி வெளியே அனுப்பினதையும் சொல்ல வேண்டும்.

’பட்டிமன்ற பேச்சு மாதிரியே பேசப்போறேனாக்கும்’ என்ற பீடிகையோடு ரொம்ப அமர்க்களமாக செய்யுள் எல்லாம் சொல்லி வணக்கம் சொன்னார். கல்தோன்றி தோன்றி மண் தோன்றா… செய்யுளில்.. உடல் தோன்றா என இவராக ரெண்டு வரியைச் சேர்த்துகிட்டார்.

அப்பறம் ஒரு உவமைச் சொன்னார். அப்பறம் ஒரு எடுத்துக்காட்டு சொன்னார். அப்பறம் ஒரு … அப்பறம் ஒரு… கடைசி வரை பேசவே இல்லை. அலோ பாஸ்… பேச்சுல மேற்கொள் இருக்கலாம். மேற்கொள்களை மட்டுமே பேச்சா வெச்சுக்கக்கூடாது. அழகாக ஒரு பாட்டு பாடுவார்ன்னு எதிர்பார்த்தேன். ஏமாத்திட்டார்.

‘தனித்திறமை’ போட்டியிலேயே செந்தமிழில் விளையாடிவராச்சே என அனிதாவின் பேச்சைக் கேட்க நினைத்தால்… ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா, டக்குனு வண்டியை பிக்பாஸ் பிரச்னைக்குள்ள விட்டுட்டாங்க. ’ஆஜித்கு ரம்யா பாஸை விட்டெல்லாம் கொடுக்கல’ என்றதும், அந்தப் பிரச்னை ஓஞ்சு ஆறுமாசம் ஆச்சு என்பதுபோல பார்த்தார் ஆஜித். பட்டிமன்றத்தில் ஏமாற்றியவர் இவரே. உயரமாகத் தெரிவதற்காக ஹீல்ஸ் செறுப்பை நிஷாவிடமிருந்து வாங்கியிருந்தார். அதை வைத்தே நிஷா பேச்சை ஆரம்பித்தார்.

“அண்ணா ஒரு கூட்டத்துல பேச ஆரம்பிக்கிறப்பா, மைக் உயரத்துல இருந்ததால, ஒரு தொண்டர் பெட்டி ஒண்ணைப் போட்டார். அதில் ஏறிய பேசிய அண்ணா’ நான் தொண்டனால் உயர்ந்தேன்’ என்றார். அதுபோல அனிதா நான் கொடுத்த ஹீல்ஸால் உயர்ந்தார் என்று வழக்கமான பட்டிமன்ற பேச்சைத் தொடங்கினார்.

”புறணி பேசறதே அழகுதான்.. நாலு பென்கள் கூடி பேசினால்….” என்று பட்டிமன்றங்கள் போய் ரொம்ப நாளாச்சேன்னு பழைய ஜோக்கெல்லாம் உதிர்த்தார் நிஷா. ஆனாலும் காய்ஞ்சி கிடக்கிற நேரத்துல பரவாயில்ல… பரவாயில்லன்னு தோணுச்சு. அன்பே எல்லாமே என்பதை வலுவாக்க, சின்ன கதை சொன்னார், மாற்றுத்திறனாளிகள் ஓட்டப்பந்தயத்தில் எல்லோரும் ஓடுகையில் ஒருவர் விழுந்துவிட, மற்றவர் தூக்கி விட்டு ஓடச் செய்தார்களாம். கதை எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ‘மாற்றுத்திறனாளிக்கும் மனிதாபிமானம் இருக்கு’ என்றீர்களே… ஏன் அவங்களுக்கு எல்லாம் மனிதாபிமானமே இருக்காதுனு நினைச்சிட்டு இருந்தீங்களா?

ஒருவழியாக தீர்ப்பு வந்தார் அர்ச்சனா. நீண்ட உரையை தயார் செய்திருப்பார் போல. ஆனா. ஆரம்பிச்ச உடனேயே பாலா கட்டையைப் போட, ‘போட்டிகள் உள்ள அன்பான வீடு’ போய் புள்ளைக்குட்டிகளைப் படிக்க வைங்க’ என்று கடையைச் சாத்தினார்.

’ஒண்ணா உட்கார்ந்துக்கூட லஞ்ச் சாப்பிட்ட மாட்டேங்கிறாங்க’ என பாலா சொன்னதற்காக, ரியோ படாதபாடு பட்டு எல்லோரையும் ஒண்ணு சேர்க்க பார்த்தார். அப்படி ஒண்ணு சேர்ந்துகூட சண்டைதா போட்டாங்க. இது பேசாம, தனித்தனியாவே திரிஞ்சிருக்கலாமே… ஆனா, ஒண்ணு, ரம்யாக்குள்ள இருக்கிற சண்டைக்காரியை கொஞ்சமா அடையாளம் காட்டுச்சு… இந்தச் சின்ன சண்டை.

’நாங்க அடிச்சா நல்லா இருக்காது… நீயே அடிச்சிக்க’ என்ற வடிவேலுவிடம் சொல்லும் ஜோக் ஞாபக இருக்கா, அதேபோல லக்ஸரி பட்ஜெட் பாயிண்ட்டுக்கு நீங்க செய்த தப்புகளுக்கு நீங்களே பாயிண்ட்டுகளைக் குறைங்க என்றார் பிக்கி.

ரமேஷ் மீசையை எடுக்காததற்கு ஒரு பத்து, ஆரி ஒழுங்கா ஆடாததற்கு ஒரு பத்து, தூங்கிட்டே இருக்கிற அனிதாவுக்கு ஒரு பத்து.. எனப் பலரையும் சொல்லி எழுபது பாயிண்ட்டுகளைச் சொன்னார் ரியோ.

வேல்முருகன் பாட, வட்டமாக சேர்களைப் போட்டு அட்டைப் பெட்டியை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வேல்ஸ் பாட்டை நிறுத்துகையில் பெட்டி இருப்பவர் அவுட். அவர் யாருக்காவது டாஸ்க் கொடுக்கலாம். அவுட்டானவங்களுக்குத்தானே டாஸ்க் கொடுக்கணும். உல்டாவா இருக்கே… சரி பார்ப்போம்.

விளையாட்டில் முதல் ஆளாய் வெளியே வந்தது ஷனம். அவர் பாலாவுக்கு கொடுத்த டாஸ்க். ‘என்னைப் பற்றி பத்து நல்ல விஷயம்’ பத்து நல்ல விஷயங்களா… உண்மையிலேயே ரொம்ப கஷடமான டாஸ்க்தான் ஷனம்… அவர் ஷனமை வர்ணித்து அலைபாயுதே மாதவன் ஸ்டைல்ல சொல்ல, வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார் ஷனம். இதை பிக்பாஸ் எடிட்டர் பாட்டெல்லாம் போட்டு வேற மாதிரி காட்டிடுவார்ன்னு பாலா நினைச்சிருப்பார் போல. அதனால,  டக்குனு கரெண்ட் போனமாதிரி ‘பத்து பாயிண்ட் முடிஞ்சிருச்சு’ என ஜகா வாங்கிட்டார்.

நிஷா அவுட்டானபோது ரமேஷ்க்கு ஷேவிங் க்ரீம் பூசி அழகுப்பார்த்தார். ஆஜித் அவுட்டாகும்போது சம்யுக்தாவுக்கு மீசை வரையப்பட்டது.

ரம்யா அவுட்டானதும் ஆரிக்கு நிஷாவின் நைட்டியைப் போட்டு மல… மல… பாட்டுக்கு டான்ஸ் ஆட வைத்தார். கூட ரியோவின் சேர்ந்து ஆடி கலகலப்புக்கூட்டினார். அனேகமாக பிக்பாஸ் வீட்டில் நைட்டி போட்டுக்கிட்டு சுத்தற முதல் ஆள் நம்ம நிஷாவாகத்தான் இருக்கும்.

அப்படியே ஆட்கள் குறைய குறைய வேல்முருகன் பாடல்களில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். சம்யுக்தா வெளியேறுகையில் சுரேஷ்க்கு காஞ்சனா வேஷம் போடச் சொல்ல, ‘தனியா வேஷம் வேற போடணுமா?’எனப் பலர் நினைத்திருக்கலாம். ஆனால், வேஷம் போட்டு செமையான பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார் சுரேஷ். அனிதா அதைப் பாராட்டிக் கொண்டாடினது இன்னும் ஆச்சர்யம். என்ன பிக்கி, இப்படி ஆயிடுச்சு? அடுத்த டாஸ்க்ல பார்த்துப்போம்.  

’தெற்கத்து சீமையிலே…’ என்ற அற்புதமான மண்மணக்கும் பாடலை வேல்முருகன் பாடினார். உண்மையில் இந்த விளையாட்டின் நடந்த ரொம்ப நல்ல விஷயம் வேல்முருகனின் பாடல்களே… இன்னும் ரெண்டு பாட்டு பாடமாட்டாரா என நினைத்தபோது கடைசியாக சுரேஷ் வெல்ல, ’பிக்பாஸ் தோட்டத்தில் தீபாவளி பரிசு காத்திருக்கு’ என்பதுபோல பரிசு அனுப்பி வைத்திருந்தார். ’எல்லாம் உங்களுக்குத்தான்’ என்று வாரி வழங்கினார் சுரேஷ்.

’ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு… காத்தாடி போலாகுது’ என அழகான பாடல் ஒலிக்க, பின்கதை சுருக்கம் சொல்வதைக்கூட மறந்து லைட்ஸ் ஆஃப் செய்தார் பிக்பாஸ்.

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு

மாவட்ட செய்திகள்

Most Popular

கருணாஸ் யாத்திரை தடுத்து நிறுத்தம்… போலீசார் தம்மை கேவலப்படுத்துவதாக புகார்…

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாத்திரை சென்ற எம்எல்ஏ கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர்...

“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிமுகவுக்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்லையொட்டி, அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி...

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தான் வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்...

குடியரசு தின முன்னெச்சரிக்கை – போலீஸ் பாதுகாப்பில் பாம்பன் பாலம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் குடியரசு தினத்தன்று பெட்ரோல் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுகின்றன.
Do NOT follow this link or you will be banned from the site!