ராயல் என்பீல்டு விற்பனை வீழ்ச்சி… ரூ.55 கோடி நஷ்டத்தை சந்தித்த எய்ஷர் மோட்டார்ஸ்…

ராயல் என்பீல்டு விற்பனை வீழ்ச்சி… ரூ.55 கோடி நஷ்டத்தை சந்தித்த எய்ஷர் மோட்டார்ஸ்…

பிரபல ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மற்றும் இதர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான எய்ஷர் மோட்டார்ஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.55 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. அந்நிறுவனம் சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.451.80 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது.

ராயல் என்பீல்டு விற்பனை வீழ்ச்சி… ரூ.55 கோடி நஷ்டத்தை சந்தித்த எய்ஷர் மோட்டார்ஸ்…

2020 ஜூன் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.818 கோடியாக குறைந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 66 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் எய்ஷர் மோட்டார் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,382 கோடி ஈட்டியிருந்தது.

ராயல் என்பீல்டு விற்பனை வீழ்ச்சி… ரூ.55 கோடி நஷ்டத்தை சந்தித்த எய்ஷர் மோட்டார்ஸ்…

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத காலத்தில் மொத்தம் 58,383 ராயல் என்பீல்டுகளை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிட்டால் 68 சதவீதம் குறைவாகும். வால்வோ எய்ஷர் கமர்ஷியல் வெஹிகிள் மொத்தம் 2,129 டிரக்குகள் மற்றும் பஸ்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 13,331 டிரக்குகள் மற்றும் பஸ்களை விற்பனை செய்து இருந்தது.