1.99 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை.. லாபமாக ரூ.533 கோடி அள்ளிய எய்ஷர் மோட்டார்ஸ்

 

1.99 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை.. லாபமாக ரூ.533 கோடி அள்ளிய எய்ஷர் மோட்டார்ஸ்

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.532.6 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மற்றும் இதர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான எய்ஷர் மோட்டார்ஸ் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.532.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 6.8 சதவீதம் அதிகமாகும்.

1.99 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை.. லாபமாக ரூ.533 கோடி அள்ளிய எய்ஷர் மோட்டார்ஸ்
எய்ஷர் மோட்டார்ஸ்

2020 டிசம்பர் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,828.3 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டை காட்டிலும் 19.3 சதவீதம் அதிகமாகும். வாகனங்கள் விற்பனை அதிகரித்ததும் எய்ஷர் மோட்டார் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

1.99 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை.. லாபமாக ரூ.533 கோடி அள்ளிய எய்ஷர் மோட்டார்ஸ்
ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் மாடல்கள்

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் (2020 அக்டோபர்-டிசம்பர்) மொத்தம் 1.99 லட்சம் ராயல் என்பீல்டு வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 1.67 சதவீதம் குறைந்து ரூ.2,650.15 ல் முடிவுற்றது.