பிச்சைக்காரக் கிழவியின் வங்கிக் கணக்கில் ரூ 3 ஆயிரம் கோடி – ஒரு ‘அடேங்கப்பா’ மேட்டர்

 

பிச்சைக்காரக் கிழவியின் வங்கிக் கணக்கில் ரூ 3 ஆயிரம் கோடி – ஒரு ‘அடேங்கப்பா’ மேட்டர்

கடந்த 30 ஆண்டு காலமாக பிச்சையெடுத்து வந்த ஒரு கிழவியின் வங்கிக் கணக்கில் ரூ 3 ஆயிரம் கோடி பணம் இருப்பதும், அவருக்குச் சொந்தமாக பல மாடிகளைக் கொண்ட 5 குடியிருப்புகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
எகிப்து நாட்டின் பல மாகாணங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிச்சையெடுத்து வருபவர் ‘நபிஷா’. 27 வயதில் கணவரைப் பிரிந்த இவர் அதன் பின்னர் வேறு வழியில்லாமல் ரோட்டுக்கு பிச்சைஎடுக்க வந்தார். இப்போது அவருக்கு 57 வயதாகிறது. இவரைக் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவரை விசாரித்த போலீசார் அதிர்ச்சியின் உச்ச நிலைக்கே சென்று விட்டனர்.

பிச்சைக்காரக் கிழவியின் வங்கிக் கணக்கில் ரூ 3 ஆயிரம் கோடி – ஒரு ‘அடேங்கப்பா’ மேட்டர்


அவரது ஏராளமான வங்கிக் கனக்குகளில் இந்திய மதிப்பில் மொத்தம் ரூ 3 ஆயிரம் கோடி இருப்பதும் அவருக்குச் சொந்தமாக பல மாடிகளைக் கொண்ட 5 குடியிருப்புகளும் இருப்பது தெரிய வந்தது. இவரது மாடி வீடுகளில் குடியிருப்போர் மொத்தம் 100 பேர் தரும் மாத வாடகை மட்டும் பல லட்சங்களைத் தான்டுகிறது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது மட்டுமல்ல, தனது இரண்டு கால்களும் ஊனம் என்று சொல்லி சக்கர நாற்காலியில் இருந்தபடியே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இது பற்றியும் போலீசார் விசாரித்த போது அதுவும் பொய் எனத் தெரியவந்துள்ளது. அவர் ஊனமுற்றவர் அல்ல என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

பிச்சைக்காரக் கிழவியின் வங்கிக் கணக்கில் ரூ 3 ஆயிரம் கோடி – ஒரு ‘அடேங்கப்பா’ மேட்டர்


இது பற்றி நபிஷா கூறும்போது ஒரு முறை எனக்கு காலில் காயம் ஏற்பட்டது அதனால் சக்கர நாற்கலியைப் யன் படுத்தினேன்.. இந்த சமயத்தில் எனக்கு வருமானமும் கூடியது. மேலும் நடந்து செல்வதால் ஏற்படும் உடல் அசதியும் இல்லாமல் போனது..அதிகப்படியான நபர்களை பார்க்கவும் முடிந்தது. அதனால் சக்கர நாற்காலியில் செல்வதை வாடிக்கையாக்கி விட்டேன். பொதுவாகவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது மனிதர்களின் மனித நேயம் அதிகமாக இருக்கிறது. முன்பு ஒரு ரூபாய் தந்தவர்கள் இப்போது 10 ரூபாய் தருகிறார்கள். இதுமட்டுமல்ல முன்பை விட தானம் செய்வோரும் அதிகப்படியாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.