#Egmore திமுகவின் கோட்டை எழும்பூர்.. உதய சூரியனுக்கு பெருவாரியான ஆதரவு!

 

#Egmore திமுகவின் கோட்டை எழும்பூர்.. உதய சூரியனுக்கு பெருவாரியான ஆதரவு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முக்கிய தேர்தல் இது. அரசியல் ரீதியாக மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்குமா? அல்லது ஆளுங்கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? என்பது வரும் மே 2ம் தேதி தெரிய வந்துவிடும். இத்தகைய சூழலில், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி எழும்பூர்.

#Egmore திமுகவின் கோட்டை எழும்பூர்.. உதய சூரியனுக்கு பெருவாரியான ஆதரவு!

திமுகவின் கோட்டை:

கடந்த 30 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எழும்பூர் தொகுதியை திமுக 5 முறையும் தேமுதிக ஒரு முறையும் கைப்பற்றியுள்ளது. தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவும் திமுகவை சேர்ந்த ரவிச்சந்திரன் தான். இந்த முறை திமுகவில் இருந்து பரந்தாமன் போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார்.

எழும்பூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று தான் சொல்ல வேண்டும். திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் எந்த வேட்பாளர் நின்றாலும், அசால்ட்டாக ஜெயிக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு பெருகி இருக்கிறது. இந்த முறையும் மக்கள் திமுகவுக்கு தான் பெருவாரியான ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

#Egmore திமுகவின் கோட்டை எழும்பூர்.. உதய சூரியனுக்கு பெருவாரியான ஆதரவு!

ஆளப்போவது யார்?

இந்த தொகுதியின் முக்கிய பிரச்னைகளாக அங்கிருக்கக் கூடிய மக்கள் சொல்வது என்னவென்றால் போக்குவரத்து நெரிசல், சுகாதாரமில்லாத நிலை, பொதுக் கழிப்பிடங்கள் இல்லை, சாக்கடை அடைப்பு போன்றவை தான். தற்போதைய எம்.எல்.ஏ ரவிச்சந்திரனுக்கு எதிராக மக்கள் புகார்கள் ஏதும் தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு எழும்பூரை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது திமுக.

சர்வேயின் முடிவில், எழும்பூர் தொகுதியை மீண்டும் திமுக தான் கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நமது இந்த கணிப்பு தேர்தலில் எதிரொலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!