முட்டை விலை உயர்வா.. இன்றைய நிலவரம் என்ன?

 

முட்டை விலை உயர்வா.. இன்றைய நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், இது தொடர்பாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. அதில் கொரோனா சிக்கன் மற்றும் முட்டை வழியாக பரவும் என்பதும் ஒன்று. இந்த வதந்தி வேகமாக பரவ கோழி மற்றும் முட்டை விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு குறைந்தது. குறிப்பாக ஒரு முட்டை ஒரு ரூபாய்க்கும் சில இடங்களில் இலவசமாக கூட வழங்கப்பட்டு வந்தது.

முட்டை விலை உயர்வா.. இன்றைய நிலவரம் என்ன?

அதே போல ஒரு கிலோ கோழிக்கறி ரூ.20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கோழிக்கறி விற்பனை ஓரளவு சூடு பிடித்துள்ள நிலையில், முட்டை விற்பனையும் நன்றாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.4 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.