முட்டை விலையில் மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் இது தான்!

 

முட்டை விலையில் மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் இது தான்!

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், இது தொடர்பாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. அதில் கொரோனா சிக்கன் மற்றும் முட்டை வழியாக பரவும் என்பதும் ஒன்று. இந்த வதந்தி வேகமாக பரவ கோழி மற்றும் முட்டை விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு குறைந்தது. குறிப்பாக ஒரு முட்டை ஒரு ரூபாய்க்கும் சில இடங்களில் இலவசமாக கூட வழங்கப்பட்டு வந்தது. அதே போல ஒரு கிலோ கோழிக்கறி ரூ.20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மீண்டும் கோழிக்கறி மற்றும் முட்டை விலை சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

முட்டை விலையில் மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் இது தான்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், ஒரே நாளில் முட்டை விலை ரூ.35 காசுகள் அதிகமாகி கொள்முதல் விலை ரூ.4.25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய போது முடங்கியிருந்த முட்டை வியாபாரம், தற்போது விற்பனை சூடு பிடிப்பதால் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது.