• March
    31
    Tuesday

Main Area

Main



கொரோனா பீதி: 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை சரிவு 

முட்டை
முட்டை

 

130க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தையடுத்து மக்களின் பீதி இன்னும் அதிகரித்தது கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் ஏற்படுவதாகவும், கேரளாவில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பதால் அதனை சாப்பிடக்கூடாது என்றும் வதந்திகள் பரவி வருகிறது. அதனால் கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் கோழிக்கறி மற்றும் முட்டைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. 

முட்டை விலை

இந்நிலையில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டையின் விலை கடுமையாக சரிந்துள்ளது ஒரு முட்டையின் விலை 25 காசுக்கள் குறைந்து 2 ரூபாய் 65 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.