முட்டை ஆம்லெட் தெரியும்..முட்டை ஆம்லெட் குழம்பு தெரியுமா?

 

முட்டை ஆம்லெட் தெரியும்..முட்டை ஆம்லெட் குழம்பு தெரியுமா?

அசைவ உணவு பிரியர்களே !! உங்களுக்கு முட்டை குழம்பு , முட்டை ஆம்லெட் தெரியும் ஆனால் முட்டை ஆம்லெட் குழம்பு தெரியுமா….இந்த சுவையான குழம்பை எப்படி செய்வது என்று பார்ப்போம்!! 

முட்டை ஆம்லெட் தெரியும்..முட்டை ஆம்லெட் குழம்பு தெரியுமா?

தேவையான பொருட்கள்
முட்டை : 4 

சின்ன வெங்காயம் : 20 

பெரிய வெங்காயம் : 1 

கருவேப்பிலை : 5 இலைகள் 

பச்சை மிளகாய் : 2

சிவப்பு மிளகாய் : 5

தேங்காய் துருவல் : 5 டேபிள் ஸ்பூன் 

சீரகம் : 2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் : 1 டீஸ்பூன் 

கொத்தமல்லி இலை : 1 டீஸ்பூன் 

உப்பு : தேவையான அளவு 

நல்லெண்ணெய் : 4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை

  • முட்டையை உடைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி , முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் செய்ய வேண்டும். 
  •  கலக்கி வைத்துள்ள முட்டை கலவை  முழுவதையும் ஆம்லெட் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். 
  • மிளகாய் , சீரகம்  தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும் . பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
  •  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்  கறிவேப்பிலை போட்டு வதக்கவும் .
  • அதன்பின் அரைத்த மசாலாவை போட்டு நன்றாக வதக்கி சிறிது தண்ணீர், மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும் 
  • குழம்பு கெட்டியானதும் ஆம்லெட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலையை  போட்டு இறக்கவும் 

சுவையான முட்டை ஆம்லெட் குழம்பை சூடாக பரிமாறுங்கள்!!!