Home க்ரைம் `இப்படியெல்லாம் பிறந்தநாளை கொண்டாடுவாங்களா?'- சர்ச்சைக்குள்ளான வீடியோ

`இப்படியெல்லாம் பிறந்தநாளை கொண்டாடுவாங்களா?’- சர்ச்சைக்குள்ளான வீடியோ

வாலிபர் ஒருவரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடியதோடு, அதனை செல்போனில் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் டிஜிட்டலுக்கு மாறி வரும் நிலையில் வாலிபர்கள் தங்கள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுகிறோம் என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதோடு, காவல்துறையினரின் நடவடிக்கையில் இருந்தும் தப்ப முடியவில்லை.

குமரி மாவட்டம், திட்டுவிளையில் வாலிபரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடி இருக்கிறார்கள். அந்த கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. முதலில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பரை கேக் வெட்ட வைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார்கள். பின்னர் கேக்கை வாலிபர், நண்பர்களுக்கு ஊட்டி விடுகிறார். நண்பர்களும் அவருக்கு ஊட்டி விடுகிறார்கள். அதன்பிறகு, வாலிபரை மரத்தில் கட்டி வைத்து, அவர் மீது வண்ணப்பொடிகளை நண்பர்கள் தூவுகின்றனர். பின்னர் தலை மற்றும் உடலில் பல இடங்களில் முட்டையை உடைத்து அபிஷேகம் செய்கிறார்கள். நண்பர்கள் செய்யும் அந்த அன்பு தொல்லையை பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர் எந்த தடையும் செய்யாமல் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார். இந்த காட்சி 5 நிமிடங்கள் ஓடுகிறது.

ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் சாணியை கரைத்து பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் மீது அவருடைய நண்பர்கள் பூசும் சம்பவம் சமீபத்தில் நடந்திருந்தது. இந்த நிலையில், நண்பர்கள் முட்டை அபிஷேகம் செய்யும் காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“பிறந்த நாளன்று பெரியவர்களிடம் ஆசி பெறுவது, கடவுளை வணங்குவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற கலாசாரம் இளைஞர்களிடையே மாறி, தற்போது உற்சாகமிகுதியில் வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடும் நோக்கில் முட்டை அபிஷேகம் செய்யும் காட்சி முகம் சுளிக்கும் வகையில் உள்ளது” என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலா நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை- தயாநிதிமாறன்

திருவாரூர் அடுத்த காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200...

41 இடங்களை கொடுக்கங்கள்! இல்லையெனில் கொடுக்கும் இடத்தில் கூட்டணி- தேமுதிக

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் கேட்க உள்ளோம் என தேமுதிக கழக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு...

“சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது”

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு...

சசிகலா உடல்நிலை கோளாறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சீமான்

சசிகலா உடல் நலம் பெற்று வெளியே வரவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டல தேர்தல்...
Do NOT follow this link or you will be banned from the site!