முட்டை, கறிக்கோழி விலை மீண்டும் சரிவு!

 

முட்டை, கறிக்கோழி விலை மீண்டும் சரிவு!

பறவைக் காய்ச்சல் காரணமாக முட்டை மற்றும் கறிக்கோழி விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

முட்டை, கறிக்கோழி விலை மீண்டும் சரிவு!

கேரள மாநிலத்தின் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உருவாகியுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் இறந்தன. இதனால் தொற்று மனிதர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டதால், கோழிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கேரளாவிற்கு கோழிகள் ஏற்றுமதி செய்யவும், அங்கிருந்து கோழி, முட்டைகளுடன் வாகனங்கள் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

முட்டை, கறிக்கோழி விலை மீண்டும் சரிவு!

இந்நிலையில் நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 25 காசுகள் குறைந்து 4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பண்ணைகளில் ஒரு கிலோ கறிக்கோழி விலை 6 ரூபாய் குறைந்து ரூ. 22 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ. 14 குறைந்து ரூ. 78 க்கும், முட்டை விலை 25 காசு குறைந்து ரூ. 4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையானது.பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் பண்ணைகளில் முட்டை, கறிக்கோழி விலை குறைந்து விற்பனையாகிறது கவனிக்கத்தக்கது.