வங்கிக்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசாளர் எட்வின் ஜெயக்குமார் போலீசில் சிக்கினார்

 

வங்கிக்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசாளர் எட்வின் ஜெயக்குமார் போலீசில் சிக்கினார்

வங்கிக்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசாளர் எட்வின் ஜெயக்குமார் போலீசில் சிக்கினார்

வங்கிக்கு வரும் பெண்களை தனது வலையில் வீழ்த்தி சல்லாபத்தில் ஈடுபட்டு மொபைலில் படம் எடுத்த விவகாரத்தில் வங்கி காசாளரை 7 மாதத்திற்கு பின்னர் கைது செய்திருக்கிறது மணப்பாறை போலீசார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள வங்கி ஒன்றில் (இந்தியன் வங்கி) காசாளராக வேலை பார்த்த வந்தார். இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த தாட்சர் (தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் எனக்கூறியுள்ளார்) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 ம் தேதி மணப்பாறையில் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெற்ற பின்னர் எட்வின் ஜெயக்குமார் மனைவியுடனான இல்லற வாழ்வை துறந்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி எட்வின் ஜெயக்குமார் குடும்பத்தினர் தாட்சரிடம் வரதட்சனை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

வங்கிக்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசாளர் எட்வின் ஜெயக்குமார் போலீசில் சிக்கினார்

இதனால் மனவேதனை அடைந்த தாட்சர் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் தான் ஒரு நாள் எட்வின் ஜெயக்குமாரின் செல்போன்களை எடுத்து பார்த்த போது அதில் பல பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் நிர்வாண நிலையிலும், அரை நிர்வாண கோணத்திலும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த வீடியோக்கள் குறித்தும், மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தொடர்பாகவும் தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 5 பேர் மீது பெயரளவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் எட்வின் ஜெயக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றனர்.

வங்கிக்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசாளர் எட்வின் ஜெயக்குமார் போலீசில் சிக்கினார்

இதையறிந்த தாட்சர் மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தன்னிடம் இருந்த ஆதாரங்களை காட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை அடுத்து வழக்கில் திருத்தம் செய்யப்பட்டு மேலும் சில பிரிவுகளை சேர்ந்து எட்வின் ஜெயக்குமாருக்கான முன்ஜாமீனை ரத்து செய்தனர்.
இதுமட்டுமின்றி எட்வின் ஜெயக்குமாரை உடனடியாக கைது செய்திட நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் எட்வின் ஜெயக்குமார் தலைமறைவானார். இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 7 ம் தேதி பதியப்பட்டாலும் கூட அதன் பின்னர் எட்வின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்யாத நிலையே இருந்தது. இதுமட்டுமின்றி மணப்பாறையில் வசித்ததால் சம்பவம் மணப்பாறை மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கொரோனா குறுக்கிட்டதால் இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

வங்கிக்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசாளர் எட்வின் ஜெயக்குமார் போலீசில் சிக்கினார்

ஆனால் தன்னிடம் பல்வேறு ஆதாரங்கள் உள்ள நிலையில் அனைத்தையும் வழங்கப்பட்டும் கூட எட்வின் ஜெயக்குமார் கைது செய்யப்படாத நிலை இருந்ததை அறிந்த தாட்சர் இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர், துணைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர் என உயரதிகாரிகளிடம் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி வந்தார். அதன்படி போலீசார் எட்வின் ஜெயக்குமாரை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினர்.

இந்நிலையில் தான் மணப்பாறை பகுதியில் காவல் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் திருச்சி சாலையில் எட்வின் ஜெயக்குமார் சென்று கொண்டிருப்பதாக மணப்பாறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று எட்வின் ஜெயக்குமாரை கைது செய்தனர். பல்வேறு பெண்களுடன் சல்லாபமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையிலும் கூட 7 மாதம் வரை தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கிக்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசாளர் எட்வின் ஜெயக்குமார் போலீசில் சிக்கினார்

வங்கிக்கு வரும் பெண்களை வங்கியில் கடன் பெற்றுத்தருவதாகக்கூறி பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதுடன் அவர்கள் நெருக்கமாக இருக்கும் போது தனது மொபைல் போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார். இதேபோல் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை படம் பிடித்தும் வைத்திருந்துள்ளார். இவரது மனைவியைத் தவிர வேறு பெண்கள் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிக்கு வரும் பெண்களை காசாளர் தனது காம வலையில் வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எட்வின் ஜெயக்குமாரின் தாயார் லில்லிஹைடா, உறவினர்கள் கேத்தரின் நிர்மலாதேவி, ரீட்டா, தேவி பிலோமினா ஆகிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் காவல்துறை உயரதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி உள்ளது.