மாணவர்களுக்கு வினாடி வினா நடத்துங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

 

மாணவர்களுக்கு வினாடி வினா நடத்துங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினாடி வினா நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும் கற்றல் இடைவெளியை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை அலுவலரின் அறிவுரை படி எல்லா சனிக்கிழமையும் ஆய்வகத்தில் தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் அடிப்படையில் வினா-விடை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்களும் வினாடி- வினா போட்டியை எல்லா சனிக்கிழமையும் காலை 9மணி முதல் மாலை 5 மணிக்குள் நடத்த வேண்டும்.

மாணவர்களுக்கு வினாடி வினா நடத்துங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கணினிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு குழுவினருக்கும் எமிஸ் லாகின் மற்றும் கடவுச் சீட்டை பயன்படுத்தி ஒன்றரை மணி நேரத்தில் நடத்த வேண்டும். சனிக்கிழமை நடத்த முடியவில்லை எனில் அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடத்த வேண்டும். வினா – விடை போட்டிக்கான முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.