“சம்பந்தப்பட்டவரு பதற்றப்பட தான செய்வாரு” – எடப்பாடியை கலாய்த்து கலகலத்த சீமான்!

 

“சம்பந்தப்பட்டவரு பதற்றப்பட தான செய்வாரு” – எடப்பாடியை கலாய்த்து கலகலத்த சீமான்!

கோடநாடு கொலை வழக்கில் கைதாகியுள்ள சயானின் லேட்டஸ்ட் வாக்குமூலம் மீண்டும் அவ்வழக்கின் மீதான கவனத்தைக் குவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியின் பெயர் அடிபடுவதே அதற்குக் காரணம். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் காரணகர்த்தாவே எடப்பாடி தான் என சயான் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. திமுக அரசுக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்தச் செய்திகள் அனைத்தும் எடப்பாடியின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“சம்பந்தப்பட்டவரு பதற்றப்பட தான செய்வாரு” – எடப்பாடியை கலாய்த்து கலகலத்த சீமான்!

இதுதொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் மறு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கோர, போலாம் ரைட் என்பது போல நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது. மறு விசாரணைக்கு எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மறு விசாரணைக்கு தடையில்லை என்றது. இதனிடையே சசிகலா, எடப்பாடி, இளவரசி ஆகியோரை விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்பதால், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

“சம்பந்தப்பட்டவரு பதற்றப்பட தான செய்வாரு” – எடப்பாடியை கலாய்த்து கலகலத்த சீமான்!

அதேபோல கேரளாவைச் சேர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு காவல் துறை தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு பல கோணங்களில் கோடநாடு கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது. இதனால் எடப்பாடி மிரண்டு போயுள்ளதாகக் கூறப்படுகிறது. கோடநாடு கொலை வழக்கை அரசியல் பழிவாங்கலுக்காக திமுக கையிலெடுப்பதாக அதிமுக எம்எல்ஏக்களை கூட்டிக்கொண்டு வெளிநடப்பெல்லாம் செய்தார். எப்போது வேண்டுமானாலும் உண்மை வெளிவரலாம் என்பது போல பதற்றத்துடனே இருக்கிறார் எடப்பாடி.

இச்சூழலில் இதுதொடர்பாக நாம் தமிழர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், “சம்பந்தப்பட்டவரு பதற்றப்படத்தான செய்வாரு? வேற என்ன செய்வாரு?” என்று கூறி தனக்கே உரித்தான பாணியில் அருகில் உள்ளவர்களைப் பார்த்து சிரித்தார். மேலும் பேசிய அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரும் இல்லை; சசிகலாவும் சிறை சென்றுவிட்டார். அப்போ இந்த வேலைய யாரு செஞ்சிருப்பா? கோடநாடு கொலை நடக்கும்போது அதிகாரத்தில் இருந்தது யாரு? எடப்பாடிக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா? விமர்சனங்கள் உண்மையில்லை என்றால் பயப்பட வேண்டாம். விசாரணை முடியட்டும் அதற்குப் பிறகு பேசலாம்” என்றார்.