“உங்க அப்பாவுக்கு ஒரு நியாயமா?” – ஒரே போடு போட்ட எடப்பாடி… ஸ்டாலின் வியூகங்கள் டோட்டல் டேமேஜ்!

“உங்க அப்பாவுக்கு ஒரு நியாயமா?” –  ஒரே போடு போட்ட எடப்பாடி… ஸ்டாலின் வியூகங்கள் டோட்டல் டேமேஜ்!

தேர்தல் களத்தில் அனல் பறக்கும் விவாதம் என்றால் அது எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வரானார் என்பது தான். தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கினாரா அல்லது ஊர்ந்துசென்று வாங்கினாரா என்பது ஸ்டாலினுக்கு டவுட். எங்கே பிரச்சாரத்துக்குச் சென்றாலும் எடப்பாடி சசிகலா காலில் விழுந்த விவகாரத்தை இழுக்காமல் ஸ்டாலின் அப்பிரச்சாரத்தை முடிப்பதே இல்லை. இது தான் ஸ்டாலினின் தேர்தல் வியூகமும் கூட.

“உங்க அப்பாவுக்கு ஒரு நியாயமா?” –  ஒரே போடு போட்ட எடப்பாடி… ஸ்டாலின் வியூகங்கள் டோட்டல் டேமேஜ்!

இந்த வியூகத்தை உடைக்க பாய்ண்ட் கிடைக்காமல் தவித்துவந்த எடப்பாடி, “நான் ஊர்ந்துசெல்லாமல் நடந்துசென்றே முதல்வர் பதவியை வாங்கினேன். ஊர்ந்துசெல்ல நான் என்ன பாம்பா? பல்லியா?” என்றும், “அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களால் தான் நான் முதல்வர் ஆனேன்” எனவும் கூறியிருந்தார். இப்போது புதிதாக ஒரு பாய்ண்டை பிடித்திருக்கிறார் எடப்பாடி. சேலம், தருமபுரி ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

“உங்க அப்பாவுக்கு ஒரு நியாயமா?” –  ஒரே போடு போட்ட எடப்பாடி… ஸ்டாலின் வியூகங்கள் டோட்டல் டேமேஜ்!

தருமபுரியில் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி வந்தவழி தெரியும் என்கிறார் ஸ்டாலின். அது அனைவருக்கும் தெரியும். எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் நான் முதல்வர் ஆனேன். கலைஞரை நம்பியா மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள். அண்ணாவை நம்பி ஓட்டு போட்டு முதல்வராக்கினார்கள். அவர் மறைந்த பிறகு கலைஞர் முதல்வரானார்.

“உங்க அப்பாவுக்கு ஒரு நியாயமா?” –  ஒரே போடு போட்ட எடப்பாடி… ஸ்டாலின் வியூகங்கள் டோட்டல் டேமேஜ்!

அண்ணா மறைந்தபோது எப்படி கலைஞர் முதல்வரானாரோ, அதுபோல் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார்கள். இதில் என்ன தப்பு? உங்க அப்பா என்ன நேரடியாகவாக முதல்வராக வந்தார்? உங்க அப்பாவிற்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?” என்றார். இந்த வியூகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ள எடப்பாடி ஜெயலலிதா மரண அஸ்திரத்துக்கு என்ன கூறப் போகிறார் என்று தெரியவில்லை. அதையும் விரைவில் பார்ப்போம்.