“திமுகவின் சகாப்தம் முடிவு… புதிய மாவட்டமாகும் பழனி” – பழனியில் பழனிசாமி வாக்குறுதி!

 

“திமுகவின் சகாப்தம் முடிவு… புதிய மாவட்டமாகும் பழனி” – பழனியில் பழனிசாமி வாக்குறுதி!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவருகிறார். இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் , “திமுக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. அதிமுக கூட்டணியே வலிமையான வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தலோடு திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வரும்.

“திமுகவின் சகாப்தம் முடிவு… புதிய மாவட்டமாகும் பழனி” – பழனியில் பழனிசாமி வாக்குறுதி!

தைப்பூச திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு அதிமுக அரசு. நிலமும், வீடும் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரும். இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்க இல்லந்தோறும் வாஷிங்மெஷின் வழங்கப்படும். பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளே இல்லை எனக்கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்துள்ளனர்” என்றார். எடப்பாடி இதற்கு முன்னர் ஆரணியை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். அதேபோல அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியை புதிய மாவட்டமாக அறிவிப்போம் என்றார்.