முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை!

 

முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை!

மரவல்லிக் கிழங்கில் மாவுப் பூச்சியின் தாக்குதலை தடுத்து நிறுத்தி, மரவல்லிக் கிழங்கு விவசாயிகளின் துயர் துடைத்திட வேண்டும் என்று அதிமுக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை!

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மரவள்ளிக்கிழங்கு விளைச்சலை நம்பி சேலம் ,நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுமார் 470 ஆலைகளும் ஆலைகள் மூலம் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் சேலம் சேகோ சர்வ் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 1800 கோடி ரூபாய் ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது.

மரவள்ளி கிழங்கு பயிரிட முக்கிய எதிரி மாவுப்பூச்சி ஆகும். தற்போது மாவுப் பூச்சியின் தாக்குதல் மரவள்ளி கிழங்கு பயிர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி அதன் உற்பத்தி குறைந்துள்ளது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை!

சென்றாண்டு மாவுப் பூச்சியின் தாக்குதல் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டு அம்மா அரசு உடனடியாக அதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு செலவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட நிலங்களில் மருந்து தெளித்து மரவள்ளி கிழங்கு பயிர் காப்பாற்றப்பட்டது. விவசாயிகளும் நஷ்டத்தில் இருந்து மீண்டனர். மரவள்ளி கிழங்கு பயிர் மட்டுமல்ல விவசாயிகள் மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பூச்சிகளால் பாதிப்பு அடைந்துள்ளது என்று அருகில் உள்ள வேளாண் அதிகாரிகளும் தெரிவித்த உடனேயே பயிர்களை காப்பாற்ற வேளாண் துறை மூலம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வேண்டிய நிதியை ஒதுக்கி மருந்து தெளித்து, விவசாயிகள் பயிர் இழப்பில் இருந்து காப்பாற்றி உள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.

தற்போது சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற 10 மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிர் மாவு பூச்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக இம்மாவட்டங்களில் உள்ள வேளாண் துறை அதிகாரிகளை பகுதிகளுக்கு நேரடியாக அனுப்பி தேவையான நிதியினை ஒதுக்கி, பூச்சி மருந்து தெளித்து மாவுப்பூச்சி பாதிப்பிலிருந்து மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் .