சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி வைத்த வேண்டுகோள்!

 

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி வைத்த வேண்டுகோள்!

சபாநாயகர் அப்பாவுவிடம் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி வைத்த வேண்டுகோள்!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு பதவியேற்றுக்கொண்டார். அவரை அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான அப்பாவு சட்டப்பேரவை பணியில் நீண்ட அனுபவம் பெற்றவர். 1996இல் தமாக சார்பிலும், 2001இல் சுயேட்சையாகவும், 2006ல் திமுக சார்பிலும் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற அப்பாவு தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி வைத்த வேண்டுகோள்!

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவராக சபாநாயகர் செயல்படவேண்டும். உணர்ச்சி, ஆக்ரோஷம், கோபம் எல்லாத்தையும் கடந்து ஒரு ஆசிரியர் போல் நடுநிலையுடன் நடக்க வேண்டும்.ஜனநாயகத்தின் இதயமாக சட்டமன்றம் இருக்கின்றது. எனவே இதயம் சீராக துடிக்க வேண்டும். அதிமுகவினர் நல்ல கருத்துக்களை எடுத்து வைக்க சபாநாயகர் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.