மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

 

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டுமென பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்திருக்கும் சூழலில், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காகவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. முதல் நாள் உற்பத்தியில் 5 டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கிடைத்தது. அதன் பிறகு, இயந்திரங்கள் பழுதானதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வந்தடைந்தது. அந்த ஆக்சிஜன் தான் தற்போது மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்குமாறு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்துக்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளையும் தடுப்பூசிகளையும் வழங்க வேண்டுமென்றும் தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்காக நோயாளியாகள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் என்றும் அந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.