தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு… மோடிக்கு முதல்வர் கடிதம்

 

தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு… மோடிக்கு முதல்வர் கடிதம்

மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழை சேர்க்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை இன்று வெளியிட்டது. இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம் பெறவில்லை. மத்திய தொல்லியல் துறையின் இந்த தமிழ் புறக்கணிப்பு விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு… மோடிக்கு முதல்வர் கடிதம்

இந்நிலையில் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி 2 ஆண்டு டிப்ளமோ படிப்புக்கான தகுதியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமஸ்கிருதம், பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகளை குறைந்த பட்ச தகுதியாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் பழனிசாமி, படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். செம்மொழி அந்தஸ்தை முதலில் பெற்ற தமிழ் புறக்கணிப்பதாக கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வெட்டுகளில் 28,000 கல்வெட்டுகள் தமிழ் மொழியில்தான் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.