அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும்! மோடிக்கு முதல்வர் கடிதம்

 

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும்! மோடிக்கு முதல்வர் கடிதம்

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆங்கில சிகிச்சை ஒரு பக்கம் அளித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைக் கொடுத்தது. இதனால் தமிழக அரசும் மக்களும் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் பக்கம் சாய்ந்துள்ளனர்.

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும்! மோடிக்கு முதல்வர் கடிதம்

இந்நிலையில் அனைத்திந்திய சித்த மருத்துவ மையத்தை தமிழகத்தில் சென்னை அருகே அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னை அருகே ரயில், சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அனைத்து கட்டமைப்புகளும் இங்கு இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.