நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

 

நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் நாளை வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது.

நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

ஆளும் கட்சியான திமுக சட்டமன்ற தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. பல்வேறு வியூகங்களுடன் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியிலிருந்து பாமக திடீரென விலகியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கட்சியின் வளர்ச்சிக்காகவும் தொண்டர்களின் விருப்பப்படியும் கூட்டணியிலிருந்து விலகுவதாக பாமக அறிவித்தாலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சுக்கள் கூட்டணியில் உட்பூசல் ஏற்பட்டதையே உணர்த்துகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக மட்டுமே வெளியேறி இருக்கிறது. பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இத்தகைய சூழலில் நேற்று அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இந்த நிலையில், நாளை முதல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.