நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சருடன் முதல்வர் நாளை ஆலோசனை!

 

நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சருடன் முதல்வர் நாளை ஆலோசனை!

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009 ஆம் ஆண்டு ரூ.369 கோடி மொத்த மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் தாமிரபரணியில் வீணாகி கடலில் கலக்கும் 13 ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி நீரை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பிவிடும். இந்த திட்டம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தன. இதுவரை மூன்று கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சருடன் முதல்வர் நாளை ஆலோசனை!

இதனிடையே நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாயை முதலாமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். இந்த திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் நதிநீர் இணைப்பு தொடர்பாகவும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நதிநீர் திட்டங்கள் தொடர்பாகவும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உடன் முதல்வர் பழனிசாமி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.