“நான் பழனிசாமி ;சசிகலா காலில் விழுந்தது என் தம்பி குப்புசாமி” கலாய்த்த தினகரன்

 

“நான் பழனிசாமி ;சசிகலா காலில்  விழுந்தது என் தம்பி குப்புசாமி” கலாய்த்த தினகரன்

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் எஸ்.கே.செல்வம், எடப்பாடி வேட்பாளர் பூக்கடை சேகர் உள்ளிட்ட 11 வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய தினகரன், “எட்டப்பனாக இருந்த ஓபிஎஸ்-சால் சசிகலா முதலமைச்சராக பொறுப்பு இருக்க முடியவில்லை. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று சொல்வார்கள். அதே போல சசிகலாவை கட்சியில் சேர்க்க முடியாது என்று அண்ணன் பழனிசாமி கூறுகிறார் .அண்டப் புழுகன் ஆகாசப் புழுகன் என்பது போல எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி புழுகன் என்ற புத்தகத்தில் இடம்பெற உள்ளது.

“நான் பழனிசாமி ;சசிகலா காலில்  விழுந்தது என் தம்பி குப்புசாமி” கலாய்த்த தினகரன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவரானவர். ஆனால் தற்போது தேமுதிகவிற்கு செல்வாக்கு இல்லை என்று கூறுகிறார்கள். எத்தனை கோடிகள் இருந்தாலும், ஆட்சி அதிகாரம் இருந்தாலும் ,மக்கள் வரிப்பணத்தை சுரண்டியவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தான் வேண்டும். உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.

“நான் பழனிசாமி ;சசிகலா காலில்  விழுந்தது என் தம்பி குப்புசாமி” கலாய்த்த தினகரன்

10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து வன்னியர் சமுதாயத்தை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியுள்ளார் . சசிகலா காலில் விழவில்லை என்று சொல்கிறார் . இனி நான் பழனிசாமி இல்லை குப்புசாமி; சசிகலா காலில் விழுந்தது என் தம்பி என்று கூட அவர் சொல்ல வாய்ப்புள்ளது . நவீன எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி . அவர் அரசு கஜானாவை சானிடைசர் போடு சுத்தம் செய்து விட்டார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.