“பழனிசாமி என்னும் நான்” : முதல்வராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடியார்!

 

“பழனிசாமி என்னும் நான்” :  முதல்வராக  5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடியார்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக முதல்வராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒரு பிரளயமே வெடித்தது. ஓபிஎஸ் முதல்வராக இருந்த நிலையில் அவரை மிரட்டி பதவி விலக செய்ததாக சசிகலா மீது குற்றச்சாட்டு எழுந்தது. சொத்துக்குவிப்பு வழக்கு ஒருபுறம், முதல்வர் பதவி மறுபுறம் என வேகம் காட்டி வந்த சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த ஒரு சில தினங்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்றார்.கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரானார். அன்று முதல் இன்று வரை கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டு வருகிறார் பழனிசாமி.

“பழனிசாமி என்னும் நான்” :  முதல்வராக  5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடியார்!

இந்நிலையில் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பலரும் நினைத்த நிலையில் அதை வெற்றிகரமாக 5 ஆண்டுகள் கொண்டுசென்றுள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்று இதுவரை 20 ஆயிரத்து 500 கோப்புக்களில் கையெழுத்திட்டுள்ளாராம். இது தமிழக அரசியல் வரலாற்றில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

“பழனிசாமி என்னும் நான்” :  முதல்வராக  5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடியார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அத்துடன் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு, விவசாயிகளின் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி, தொழில்முனைவோருக்கான ஒப்பந்தங்கள், 8,835 கோடி ரூபாய் அந்நிய முதலீடு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.