கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைந்தது மகிழ்ச்சி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 

கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைந்தது மகிழ்ச்சி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞரணி தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், அக்கட்சியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. நேற்று அதனை உறுதிப்படுத்திய கல்யாண சுந்தரம், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நாம் தமிழர் கட்சியில் இருந்த முரண்பாடுகள் காரணமாகவும், மக்கள் நலன் பேணும் கட்சியில் இணைய வேண்டும் என்பதாலும் அதிமுகவில் இணைந்தேன் என கல்யாண சுந்தரம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாண சுந்தரத்துடன் 90 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைந்தது மகிழ்ச்சி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் கல்யாண சுந்தரத்தை வரவேற்றுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, “பேச்சாளர், தமிழ் உணர்வாளர், பேராசிரியர் திரு.கல்யாண சுந்தரம் அவர்கள் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எனது முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்யாண சுந்தரம், “நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். ஆனால் தற்போது முதல்வரை நேரடியாக சந்தித்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். நல்லாட்சி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முனைவை தேர்ந்தெடுத்துள்ளேன். ஊர்புறத்தில் இருந்து வரும் சாமானினியனையும் உச்சம் தொட வைத்த இயக்கம் அதிமுக. உலக தமிழர் நலனுக்காக அதிமுக பாடுபடுகிறது. விஜயலட்சுமி சீமான் மீது வைத்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என எனக்கு தெரியாது. அதிமுகவில் வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்” எனக் கூறினார்.