சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவங்கிய நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி!

 

சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவங்கிய நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரு போட்டிகளில் இந்தியா மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது. கடைசி ஒருநாள் போட்டி தற்போது கான்பெராவில் நடந்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் இருந்து மயங்க், சைனி, சாஹல், சமி ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதலாக ஷரத்துல் தாக்கூர், சுப்மான் கில், குல்தீப்.. மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இது தமிழக வீரர் நடராஜனுக்கு முதல் சர்வதேச போட்டியாகும். முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் லபுசாக்னேவை வீழ்த்தி அசத்தினார் தமிழக வீரர் நடராஜன் தங்கராசு. மொத்தமாக இரண்டு விக்கெட்டுகளை நடராஜன் வீழ்த்தினார்.

சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவங்கிய நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி!

இன்று ஒரு நாளிலே ஏராளமான ரசிகர்கள் பட்டாளயத்தை சம்பாதித்த நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.