இதை உடனே பண்ணுங்க! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கோரிக்கை

 

இதை உடனே பண்ணுங்க! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேற்கொண்டு பாதிப்பைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதை உடனே பண்ணுங்க! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கோரிக்கை

அதன்படி, மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் இயங்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர். இன்றைய கொரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு , உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.