விற்பனையாளராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் வசந்தகுமார்: முதல்வர் பழனிசாமி

 

விற்பனையாளராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் வசந்தகுமார்: முதல்வர் பழனிசாமி

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

விற்பனையாளராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் வசந்தகுமார்: முதல்வர் பழனிசாமி

விற்பனையாளராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த வசந்தகுமார், தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர். ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றியவர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட மக்கள் பணியாற்றியவர். இவர் பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் தனனி ஈடுபடுத்திக்கொண்டு, மக்களின் அன்பைப் பெற்றவர்.

வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.