எஸ்பிபியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்: பழனிசாமி

எஸ்பிபியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்: பழனிசாமி

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 40 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் மட்டுமே நம்மை விட்டு சென்றுள்ளது.

எஸ்பிபியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்: பழனிசாமி

இதனிடையே தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி பத்மஸ்ரீ- பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பிபியின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

எஸ்பிபியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்: பழனிசாமி

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களில் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.